உடையார்பாளையம் அருகே மகா சக்தி காளியாட்டம் விழா விமர்சையா

330பார்த்தது
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே இடையார் புறா குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி காளியம்மன் ஆலயத்தில் தை மாதத்தை முன்னிட்டு மகா சக்தி காளியாட்டம் விழா சிறப்பாக நடைபெற்றது. காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பம்பை மேளம் முழங்க காளியாட்டம் நடைபெற்றது. ஊஞ்சல் தாலாட்டும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி