அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பொன்பரப்பி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஆகம முறைப்படி நடைபெற்றது. புதுப்பிக்கப்பட்ட கோவிலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமங்கள், யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, புனித தீர்த்தங்களால் கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு அன்னதானம் பெற்றனர்.