காணொளி காட்சி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ

0பார்த்தது
காணொளி காட்சி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ
திமுக கட்சி சார்பில் இன்று (நவ. 9) தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் தலைமையில், காணொளி காட்சி வாயிலாக எஸ். ஐ. ஆர். குறித்து தலைமை கழக நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க. சொ. க. கண்ணன் காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளுடன் எஸ்.ஐ.ஆர். தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி