ஜெயங்கொண்டத்தில் புதிய சத்துணவு சமையலறை கட்டிடம் திறப்ப

0பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உட்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில், புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் சத்துணவு திட்டம் 2023-2024-ன் கீழ் புதிதாக கட்டப்பட்ட வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடத்தை கண்ணன் அவர்கள் திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடம் மூலம் மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் சத்துணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி