ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் தெற்கு தெருவைச் சேர்ந்த அஜித் (எ) உலகநாதன் (27) பெயிண்டரான இவர் அப்பகுதியில் உள்ள புதிய கட்டிடத்திற்கு வெள்ளை அடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேலே சென்றுகொண்டிருந்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.