பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

3பார்த்தது
அரியலூர் மாவட்டம் செந்துறையில் தமிழக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குன்னம் சட்டமன்ற தொகுதி பாஜக சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் கண்டன உரையாற்றினார். நிர்வாக சீர்கேடு, சட்ட ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற அம்சங்கள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பாஜக நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி