அரியலூர் மாவட்டம், கடுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட குடிக்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் வினியோகம் செய்யும் குழாய் உடைந்து, குடிநீர் சாலையில் வீணாக ஓடுகிறது. இதனால் பேருந்து நிலையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு செல்வோர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடைந்துள்ள குடிநீர் குழாயை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.