அரியலூர்: டாஸ்மாக் கடையை அகற்ற கோரி சாலை மறியல்

586பார்த்தது
அரியலூர் மாவட்டம் கல்லாத்தூரில், பள்ளி, வங்கி மற்றும் குடியிருப்புகள் அருகே அமைந்துள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளால் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், மதுபோதையில் இருப்பவர்களால் தொல்லை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால், 200-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் - விருத்தாச்சலம் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி