ஜெயங்கொண்டம் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்களை தயாரித்து, இளம் பெண் அனிதாவிடம் ரூபாய் 10 லட்சம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தரகோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அனிதா, எம்எஸ்சிபிஎட் பட்டய படிப்பு முடித்து டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்து வருகிறார்.