செந்துறை: அரசு உயர்நிலைப் பள்ளியில் வெற்றி விழா

78பார்த்தது
செந்துறை: அரசு உயர்நிலைப் பள்ளியில் வெற்றி விழா
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சோழன் குடிக்காடு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி தொடர்ந்து 16 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வில் 100% வெற்றி பெற்று வருகிறது. அதனை கொண்டாடும் வகையில் சோழன் குமார் வாண்டையார் தாயின் பேரில் இயங்கி வரும் சிவஞானம் அம்மாள் கல்வி அறக்கட்டளை மூலம் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி