அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிலால் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டால் சுமார் 1000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே
போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்காததால், நூற்றுக்கணக்கான பெண்கள் காலி குடங்களுடன் ஜெயங்கொண்டம்–கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து
போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.