அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புது தெருவில் உள்ள காமுண்டீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பால், தயிர், சந்தனம், மஞ்சள், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.