ஜெயங்கொண்டசோழபுரம் - Jayankondam

பாலமுருகப் பெருமான் கோவிலில் திருக்கல்யாணம் வைபோகம்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருள்மிகு பாலமுருகபெருமான் திருக்கோயிலில், சூரசம்கார விழாவையொட்டி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமியின் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. யாகங்கள் வளர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க, மங்கல இசை ஒலிக்க, வள்ளி மற்றும் தெய்வானையை சுப்பிரமணிய சுவாமிக்கு கன்னிகா தானம் செய்து கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

வீடியோஸ்


அரியலூர்