குன்னம் - Kunnam

பெரம்பலூர்: சாலை விபத்தில் திமுக நிர்வாகி உயிரிழப்பு

பெரம்பலூர்: சாலை விபத்தில் திமுக நிர்வாகி உயிரிழப்பு

பெரம்பலூர் ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளர் சிவக்குமார் (50), சனிக்கிழமை காலை தனது வயலுக்குச் சென்றுகொண்டிருந்தபோது, பெரம்பலூர்- துறையூர் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த கார் மோதி பலத்த காயமடைந்தார். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், காரை ஓட்டி வந்த அழகப்பனை (57) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


பெரம்பலூர்