பெரம்பலூா்: கோயில் உண்டியல்களை திருடிய சிறுவன் கைது

67பார்த்தது
பெரம்பலூா்: கோயில் உண்டியல்களை திருடிய சிறுவன் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில், அண்மைக்காலமாக தொடர்ச்சியாக கோயில் உண்டியல்களை உடைத்து, காணிக்கையை மர்ம நபர்கள் திருடி வந்தனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட கோயில் பூசாரிகள் மற்றும் நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், பெரம்பலூர் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் ராம்குமார் தலைமையிலான போலீசார், பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியில் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது, அப்பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோயிலின் உள்ளே, இளஞ்சிறுவர் ஒருவர் கையில் இரும்புக் கம்பியுடன் நின்றிருந்ததை அறிந்த போலீசார், அவரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், தொடர்ச்சியாக கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்த போலீசார், அவரிடமிருந்து ரூ. 7,400 பணத்தை பறிமுதல் செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சியிலுள்ள சிறுவர் குர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி