பெரம்பலூா்: கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ.. ஒருவர் பலி

935பார்த்தது
பெரம்பலூா்: கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ.. ஒருவர் பலி
பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற 9 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் ஆட்டோ, ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநர் ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஆட்டோவில் பயணித்த 9 பேர் பலத்த காயமடைந்தனர். பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி