ஏடிஎஸ்பி ஒட்டி சென்ற போலீஸ் வாகனம் விபத்து

946பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் நேற்று இரவு போலீஸ் ஜீப்பை தானே இயக்கியபடி ரோந்து சென்றுள்ளார். இந்நிலையில், இன்று அதிகாலை துறையூர் சாலையில் இருந்து பெரம்பலூர் நோக்கி வரும்பொழுது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அரசு மருத்துவமனையின் உணவு தயாரிக்கும் கூடத்தின் சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு உள்ளே புகுந்தது. இதில் ஏடிஎஸ்பி பாலமுருகன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி