பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தான் வசித்து வந்த சென்னை பெரம்பூரில் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து பெரம்பூர் பகுதி போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று இரவு முழுவதும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.