மியான்மரில் உள்ள சாங் யூ நகரில் புத்தமத பண்டிகையின் போது கூடியிருந்த பொதுமக்கள் மீது அந்நாட்டு ராணுவம் கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிராக கூடியிருந்த பொதுமக்கள் மீது ராணுவம் வெடிகுண்டுகளை வீசியுதாக கூறப்படுகிறது. இதில் 40 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.