ஓலா சிஇஓ பவிஷ் அகர்வாலுக்கு பிடிவாரண்ட்: கோவா நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

4638பார்த்தது
ஓலா சிஇஓ பவிஷ் அகர்வாலுக்கு பிடிவாரண்ட்: கோவா நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி
ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வாலை கைது செய்ய, கோவா நுகர்வோர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ரூ.1.47 லட்சம் செலுத்தி வாங்கப்பட்ட ஓலா மின்சார வாகனம் பழுதான நிலையில், அதை சரிசெய்ய கொடுத்த இடத்தில் வாகனம் மாயமானதாக புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். வாடிக்கையாளர் சேவை மற்றும் பொறுப்புடைமை குறித்த இந்த விவகாரம், மின்சார வாகனச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.