முன்னாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்களுக்கு சொத்துரிமையை சட்டமாக்கிய கலைஞரின் புகழ் விண்ணும், மண்ணும், நதியும், கடலும், தமிழும் இருக்கும் வரை நிலைபெற்று வாழும் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.