நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவால் காலமானதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் நேற்று (நவ., 11) பரவின. ஆனால், அவர் நலமுடன் இருப்பதாக அவரது மனைவியும் எம்பியுமான ஹேமமாலினி, மகள் ஈஷா தியோல் உள்ளிட்டோர் உறுதிப்படுத்தினர். அவர் நலமுடன் இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் அவருக்கு மும்பையில் வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளதாகவும் மருத்துவர்கள் தற்போது தெரிவித்தனர். இதனால், அவர் இன்று (நவ., 12) காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.