வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலேண்ட், டிசம்பர் 2025 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 5.19 சதவீதம் உயர்ந்து ரூ.862.24 கோடியாக இருப்பதாக இன்று (பிப்.11) தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ரூ.819.67 கோடி நிகர லாபத்தை ஈட்டியிருந்தது. அதே வேளையில் செயல்பாடுகளிலிருந்து கிடைத்த வருவாய் ரூ.14,830.24 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு இதே காலத்தில் இது ரூ.11,995.21 கோடியாக இருந்தது.