துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், 'பி' பிரிவில் இன்று (செப்.16) நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, தன்ஜித் ஹசன் அரை சதம் (52 ரன்கள்) அடிக்க, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான் மற்றும் நூர் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தற்போது, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.