ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி.. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

29பார்த்தது
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி.. இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் அரையிறுதிப் போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மொகாலியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் சார்பில் ஷிலானந்த் லக்ரா, தில்பிரீத் சிங் ஆகியோர் தலா 2 கோல்கள் அடித்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், அங்கத் பிர் சிங், விவேக் சாகர் பிரசாத் ஆகியோரும் கோல் அடித்து அசத்தினர். இதன்மூலம் இந்திய அணி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தொடர்புடைய செய்தி