ஆசிய கோப்பை ஹாக்கி: கஜகஸ்தானை 13-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி

2853பார்த்தது
ஆசிய கோப்பை ஹாக்கி: கஜகஸ்தானை 13-0 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி
ஜப்பானின் காகமிகஹரா நகரில் தொடங்கிய 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான (சப்-ஜூனியர்) ஆசிய கோப்பை ஆக்கி போட்டியின் தொடக்க ஆட்டத்தில், இந்திய ஆண்கள் அணி கஜகஸ்தானை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி கோல் மழை பொழிந்த இந்திய அணி 13-0 என்ற கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த அதிரடி ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் கேதன் குஷ்வாஹா 3 கோல்களும், ஷாருக் அலி, பிரகலாத் ராஜ்பார், ஆஷிஷ் தனிபுர்தி, அன்ஷ் பகுத்ரா ஆகியோர் தலா 2 கோல்களும் அடித்து அணியின் வெற்றிக்கு வலுசேர்த்தனர்.

தொடர்புடைய செய்தி