ஆசிய போட்டி .. ஆடவர் ரிகர்வ் அணியில் இந்தியா வெள்ளி வென்று அசத்தல்

20பார்த்தது
ஆசிய போட்டி .. ஆடவர் ரிகர்வ் அணியில் இந்தியா வெள்ளி வென்று அசத்தல்
ஆசிய விளையாட்டுப் போட்டி வில்வித்தையில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. ஆடவர் ரிகர்வ் அணி பிரிவிலும் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் தீரஜ் பொம்மதேவரா, யாஷ்தீப் போகே, நீரஜ் சவுகான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, தென் கொரியாவின் கிம் ஜே தியோக், கிம் வூஜின், லீ வூசியோக் ஆகியோர் கொண்ட அணியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 1-5 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

தொடர்புடைய செய்தி