பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் தேர்வு குழு

5380பார்த்தது
பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் தேர்வு குழு
அசாம் சட்டசபைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்ய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இம்ரான் மசூத், சப்தகிரி சங்கர் உலாகா ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. கடந்த தேர்தலில் பாஜக 64 இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 26 இடங்களை மட்டுமே வென்றது.

தொடர்புடைய செய்தி