திரிபுராவில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல்

8பார்த்தது
திரிபுராவின் போக்சாநகர், ஆஷாபாரி பகுதியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடத்தல் சந்தேகத்தின் பேரில் ஒருவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில், 3 வீரர்கள் காயமடைந்தனர். மேலும், அவர்களின் ஆயுதங்களைப் பறிக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் மாணிக் சாகா இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி