சென்னை ஆவடி அருகே அரசு பேருந்தில் கதவை மூட முடியாதவாறு ஜல்ல கற்களை வைத்து படியில் தொங்கி சென்ற ITI மாணவர்களை தட்டிவட்ட பேருந்து நடத்துநரை, அம்மாணவர்கள் ஆபாசமாக திட்டி சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து நடத்துநர் அளித்த புகாரின் பேரில் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட இரு மாணவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.