தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடத்தப்பட்டதற்கு எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழியிலும் கேள்வித்தாள் தரப்பட வேண்டும் என்ற விதி உள்ளதால், நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த வேண்டும். இந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே ரயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.