கேரளாவின் கண்ணூரில் இன்று (பிப்., 25) இளைஞர் காங்கிரஸார் நடத்திய போராட்டத்தின் போது அமைச்சர் வீணா ஜார்ஜ் காயமடைந்தார். திருவனந்தபுரம் செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு அமைச்சர் சென்றபோது, காங்கிரஸ் தொண்டர்கள் அவரது காரை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கழுத்து, கையில் காயமடைந்த அமைச்சர், கண்ணூர் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே வீணா ஜார்ஜை முதலமைச்சர் பினராயி விஜயன் மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.