சேலம் மாவட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் அருள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், அன்புமணி ஆதரவாளர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெத்தநாயக்கன்பாளையம் அருகே நேற்று (நவ.4) அருள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாமக மாவட்ட செயலாளர் நடராஜ் அளித்த புகாரின் பேரில் இன்று (நவ.5) பூவிழி ராஜா (33), விக்னேஷ் (25), வெங்கடேசன் (37), சரவணன் (30), அருள்மணி (32), விமல் ராஜ் (22), தமிழ்ச்செல்வன் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.