சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி தரப்பினர் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எம்எல்ஏ அருள் சென்று கொண்டிருந்த காரை நடுவழியில் நிறுத்தி ஒரு கும்பல் கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். ராமதாஸ் ஆதரவு எம்எல்வாக இருக்கும் அருளுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.