ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற 'சன்மார் ஹெரால்டு' கச்சா எண்ணெய் கப்பல் மற்றும் 'ஜக் அர்னவ்' சரக்குக் கப்பல் ஆகிய இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியிலுள்ள ஈரான் தூதருக்குச் சம்மன் அனுப்பிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அவரை நேரில் அழைத்துத் தனது கண்டனத்தைப் பதிவு செய்ததோடு இத்தாக்குதல் குறித்து விளக்கமும் கேட்டுள்ளது.