16 வயது சிறுவன் ஐஎஸ் (Islamic State) இயக்கத்தில் சேர கட்டாயப்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து கேரள காவல்துறை விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. 2019 கனகமாலா ஐஎஸ் ஆட்சேர்ப்பு வழக்கில் முன்னதாக விசாரிக்கப்பட்ட கன்னியாகுளங்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த சம்பவத்துடன் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். கண்ணூரில் உள்ள கனகமாலாவில் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள்சேர்த்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.