கம்பம் தொகுதி உதய நகரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து நேரில் சென்ற எம்எல்ஏ ஜெகநாத் மிஸ்ரா மீது 4 பேர் கொண்ட கும்பல் கார் ஏற்றிப் படுகொலை செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூலிழையில் உயிர் தப்பிய அவர், கடத்தப்படவிருந்த 3 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்துள்ளார். இதில் தொடர்புடைய பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ள நிலையில், தப்பியோடிய மற்ற நபர்களைக் காவல்துறையினர் வலைவீசித் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.