ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைக்க ரிசர்வ் வங்கி (RBI) திட்டமிட்டுள்ளதாக மார்கன் ஸ்டான்லி என்ற சர்வதேச அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 5.25% என்ற அளவில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதால், வீடு, தனிநபர், வாகனம் உள்ளிட்ட கடன்களின் EMI கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.