ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்காமல் அல்லது வங்கிகள் சிறப்பு அறிவிப்பை வெளியிடாமலேயே, லோன் வாங்கியவர்கள் தங்கள் கடன் EMI தொகையை குறைக்க முடியும். இதுகுறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி (RBI) தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, உங்களுக்கு கடன் கிடைக்க உதவும் CIBIL SCORE உயர்ந்தால், நீங்கள் ஏற்கனவே பெற்றிருக்கும் கடன்களின் EMI தொகையை குறைக்கலாம். இதுவரை EMI தொகையை சரியாக செலுத்தி உங்களின் CIBIL SCORE மேம்பட்டிருந்தால், உடனே வங்கியை அணுகலாம்.