திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழா இந்த ஆண்டு வருகிற 23-ந்தேதி தொடங்கி மார்ச் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு மார்ச் 3-ந்தேதி நடைபெறும். இதில், பெண்கள் மண் பானையில் பொங்கலிட்டு அம்மனுக்கு படைப்பார்கள். இந்த ஆண்டு 40 லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.