டி20 உலகக்கோப்பை தொடரில், இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, மிட்சேல் மார்ஷ் (54), ஹெட் (56) ஆகியோரின் அரைசதங்கள் உதவியுடன் 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் தசுன் ஹேமந்தா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது.