சில்லறை விவகாரம்.. ஹைதராபாத்தில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக்கொலை

3873பார்த்தது
சில்லறை விவகாரம்.. ஹைதராபாத்தில் ஆட்டோ ஓட்டுநர் அடித்துக்கொலை
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் வட்டேபள்ளி பகுதியில் ரூ.20 ஆட்டோ கட்டணத்துக்கு சில்லறை வழங்குவது தொடர்பாக பெண் பயணிக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண்ணின் மகன் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த ஓட்டுநர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி