சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அந்தோணி, மெரினா கடற்கரையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ், ஜிம் மாஸ்டர் சாம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது தாயாருடன் அந்தோணிக்கு இருந்த பழக்கத்தால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, படகு துடுப்புக்கட்டையால் அடித்துக் கொன்றதாக ஆகாஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.