சென்னையில், பெண்ணிற்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து வடபெரும்பாக்கத்தில் உள்ள நிறுவனத்திற்கு பெண் ஒருவர் ஆட்டோவில் சென்றுள்ளார். அந்த பெண்ணுக்கு, ஆட்டோ ஓட்டுநர் பிரசாந்த், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது இளம்பெண் கூச்சலிட்ட நிலையில், கத்தியைக் காட்டி மிரட்டி 6 சவரன் தங்க சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து போலீசார் புகார் அளித்த நிலையில், ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.