ஆட்டோ ரிக்ஷா கட்டணத்தை மறு நிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர்
விஜய் பார்த்திபன் தலைமையில் நாளை மறுநாள் (ஜூலை 9) நடைபெறவுள்ளது. ஆட்டோ கட்டணத்தை 3 ஆண்டுக்கு ஒரு முறை மறு நிர்ணயம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து தொழிற்சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்புகளுக்கு ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.