திருத்தணி முருகன் கோயில்.. முகூர்த்த தினத்தையொட்டி தடை

5868பார்த்தது
திருத்தணி முருகன் கோயில்..  முகூர்த்த தினத்தையொட்டி தடை
திருத்தணி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். நாளை (பிப்.15) முகூர்த்த தினத்தையொட்டி ஏராளமானோர் வரவுள்ளனர். இதனால், கோயில் நிர்வாகம் நாளை மலைக்கோவிலுக்கு மேல் ஆட்டோக்கள் செல்ல தடை விதித்துள்ளது. இடவசதிக்கேற்ப கார்கள் இயக்கப்படும். பக்தர்கள் கட்டணமின்றி கோயில் பஸ்களில் படா செட்டிகுளம் வரை செல்லலாம். இருசக்கர வாகனங்களில் மலைக்கோவிலுக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி