நேபாளத்தில் 15 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிமட்டத்தில் இருந்து 16,070 அடி உயரத்தில் உள்ள யாலுங் ரி சிகரத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் அவர்கள் ஓய்வெடுத்து கொண்டிருந்தபோது, திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் சிக்கி துரதிர்ஷ்டவசமாக 7 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர், அத்துடன் 3 வீரர்களை காணவில்லை என நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.