சருமம் பளபளப்பாக ஜொலிக்க சில உணவு பழக்கங்களை தவிர்ப்பது அவசியம் என அழகுக்கலை நிபுணர்கள் கூறுகின்றனர். டீ அருந்துவதை தவிர்த்தால், சருமம் வறண்டு போகும் வாய்ப்பு குறையும். அதேபோல், கூல் ட்ரிங்க்ஸ் போன்ற குளிர்பானங்கள் முகத்தில் சுருக்கங்களை வரவழைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஆரோக்கியமான சருமத்திற்கு மதுபானம் மற்றும் குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.