உடல் நலனை பாதுகாத்திட ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 30 கிராம் மட்டுமே சர்க்கரை எடுத்து கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாக 35 வயதுக்கு மேற்பட்டோர் வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது நல்லது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். ரசாயனம் கலந்த வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக நாட்டுச் சர்க்கரை, வெல்லம் அல்லது இயற்கை இனிப்பு நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது பல்வேறு நோய்களிலிருந்து உடலைக் காக்கும்.