ஆயுஷ்மான் பாரத்: காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்கிறதா?

16பார்த்தது
ஆயுஷ்மான் பாரத்: காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்கிறதா?
ஆயுஷ்மான் பாரத் (PM-JAY) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச மருத்துவக் காப்பீட்டுத் தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. தற்போது ரூ.5 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் நிலையில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் போன்ற அதிக செலவாகும் சிகிச்சைகளுக்கு இந்த வரம்பு போதுமானதாக இல்லை என்ற கவலைகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, நிலைக்குழு சிறப்பு சிகிச்சை தொகுப்புகளை அறிமுகப்படுத்தி நிதியுதவி அளிக்க வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி